மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்து குற்றத்திற்காக கண்டக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் கல்லூரிக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகளை ஏற்றி செல்வது தொடர்பாக 2 மினி பேருந்துகள் போட்டி போட்டன. இதில் கோபமடைந்த ஒரு மினி பேருந்தின் கண்டக்டரான செல்வம் என்பவர் மற்றொரு மினி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மினி பேருந்தின் உரிமையாளர் ராஜன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.