வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர் . இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் , ராம், கல்யாணசுந்தரம், ஞானம், மகேந்திரன் , வெங்கடேஷ், பிரகாஷ், இளங்கோவன் உள்ளிட்ட 9 பேர் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. தனுஷ், விஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்ததையடுத்து தப்பியோடிய 9 பேரை தேடி வருகின்றனர்.