மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் இருக்கும் சந்திரசேகரன் என்பவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தார்கள்.
இதில் மினி வேனில் 25 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் சந்திரசேகரனை கைது செய்து அவரிடம் இருந்த நான்கு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜாவில் இருக்கும் நுகர்வோர் வாணிப கிடங்களில் ஒப்படைத்தார்கள். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.