சென்னை அயனாவரம் கே.கே.நகர் 10 வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு லட்சுமிபுரம், கஸ்தூரி தெருவை சேர்ந்த கோட்டை முனியசாமி என்பவரிடம் சாந்தி மீன் வாங்கினார். அப்போது சாந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறினார். கோட்டை முனியசாமி சாந்தின் மொபைல் எண்ணை வாங்கி நல்ல மீன்கள் வந்தால் உடனே சொல்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் அன்று இரவு கோட்டை முனியசாமி சாந்தி மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது கோட்டை முனியசாமி மீன்களும் நல்லா வந்திருக்கு நீயும் அழகாய் தான் இருக்க என ஆபாசமாக பேசினார். இதனையடுத்து சாந்தி தனது கணவர் விஜயகுமாரிடம் கூறினார். அவர் சாந்தியை அழைத்துக் கொண்டு கோட்டை முனியசாமியிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். அங்கு கோட்டை முனியசாமிக்கு ஆதரவாக திரு கண்ணன்(35), விஜய் சங்கர்(27), காளிதாஸ் ஆகியோர் விஜயகுமாரை ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக் டாப்பாவை வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து விஜயகுமார் ராஜமங்கல் போலீசில புகார் அளித்தனர். இதனையடுது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கோட்டை முனுசாமி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.