தமிழகத்தில் புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இதனால் பல மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தவிர்த்து அதற்கு மேல் வரும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் குற்றம் சாட்டை வரும் நிலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய மின் கட்டணம் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி பயன்படுத்தியது 2650 யூனிட், அதற்கு கட்டணம் 15 ஆயிரத்து 970 ரூபாய் வந்தது. அதனைப் போலவே கடந்த அக்டோபர் 6-ம் தேதி பயன்படுத்தியது 2260 யூனிட், 17570 ரூபாய் வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு பயன்படுத்தியதை விட 390 யூனிட் குறைவாக பயன்படுத்தியும் 1600 ரூபாய் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கணக்கை பார்த்து எனக்கே தலை சுற்றுகிறது. சாமானியர்களின் நிலை, இதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.