Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம்: தமிழக மக்களே உஷார்….. இத யாரும் நம்பாதீங்க…. மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் எஸ் எம் எஸ் அனுப்பப்படுகிறது.

இந்த குறுந்தகவல் மூலமாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடிகள் நடைபெறுகிறது. எனவே இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு நிலை மற்றும் மின் கட்டணம் தகவல் குறித்த விவரங்களுக்கு https://tangedco.org என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை பெறும் வாடிக்கையாளர்கள் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.

Categories

Tech |