தமிழகத்தில் மொத்தம் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எவ்வித கட்டணம் மாற்றமோ எவ்வித கட்டணம் உயர்வோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்கு 27.50 ரூபாய் என இரு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்பதை விட மிகக் குறைவு தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களை நேரில் அழைத்து கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 16ஆம் தேதி கோவை எஸ் என் ஆர் கல்லூரி,நாகஸ் பதினெட்டாம் தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கம்,ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் .பொதுமக்கள் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.