Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீ…. அச்சத்தில் பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கலையரங்கம் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் எரிந்தன. இதுகுறித்து மின்சாரதுறை ஊழியர்கள் கூறும்போது, உயர் அழுத்த மின்சாரம் பாய்வதாலும், அதிகமான மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாலும் மின்கம்பங்கள் பற்றி எரிகிறது என கூறியுள்ளனர். இதனை தடுக்க மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |