மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு மின்கம்பத்தின் மீது பலமாக மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அருள் பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருள் பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருண் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.