கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் சந்திரமௌலி சாஸ்திரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாபுராஜபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சந்திரமௌலி காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த விளம்பர பலகை மற்றும் மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில் புளியஞ்சேரி, பாபுராஜபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.