Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 பேரும் உயிர் தப்பிவிட்டனர்.

ஆனால் அப்பகுதியில் இருக்கும் ஏராளமான வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |