Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய போலீஸ் ஜீப்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளான போலீஸ் வாகனத்தை ஜே.சி.பி எந்திரம் மூலம் மீட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி இரவு வேலையை முடித்துவிட்டு கன்னங்குறிச்சியில் இருக்கும் தனது வீட்டிற்கு போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த ஜீப்பை சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப் பெருமாள் கோவில் அருகே இருக்கும் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து ஜீப் மீது விழுந்ததால் இன்ஸ்பெக்டர் காந்திமதிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜே.சி.பி உதவியுடன் மின்கம்பம் அகற்றப்பட்டு போலீஸ். ஜீப் மீட்கப்பட்டுள்ளது மேலும் மின்கம்பம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |