Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்கம்பியில் உரசிய வைக்கோல்…. எரிந்து நாசமான மினிலாரி…. சேலத்தில் பரபரப்பு…!!

வைக்கோல் லோடு ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிலாரி உள்ளது. இந்த மினி லாரியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றி வந்து ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஈச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வைக்கோல் மின்சாரக் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்ததும் ஓட்டுனர் வேகமாக கீழே இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் மினிலாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மினி லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மினி லாரி மற்றும் வைக்கோல் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |