மியான்மரில் சிக்கி இருக்கும் 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கூறி இருக்கின்றனர். தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி ஹைதராபாத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர் உடனடியாக அங்கிருந்து அவர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சைபர் குற்ற செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மீறினால் லேசர் துப்பாக்கி மூலம் கரன்ட் ஷாக் கொடுத்து கடுமையாக தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கடுமையான கண்காணிப்புகளையும் மீறி இவர்கள் ஊடகங்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதன் மூலமாக தான் இந்தியா ஐடி இளைஞர்கள் படும் துன்பங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இவர்களில் ஒன்பது பேர் மட்டும் ஹைதராபாத் சேர்ந்த அம்ஜத் உல்லாகான் எனும் சமூக ஆர்வலரின் உதவியுடன் 4 லட்சம் பணம் கொடுத்துவிட்டு இந்தியாவிற்கு தப்பித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தங்களை சுட்டுக்கொன்று விடுவார்கள் என பயத்தில் ஐடி ஊழியர்கள் அடிமைகளாக வேலை செய்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் இந்திய ஐடி இளைஞர்கள் மியான்மரில் ஷ்வீ கோக்கோ என அழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் நிறைந்த சுற்றுலா தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். ஷி ஜிஜாங் இதன் உரிமையாளர் ஆவார். இவர் இன்டர் போல் போலீசாரால் தேடப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். அம்ஜத் உல்லா வெளியிட்ட பார்த்த ஒன்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையம் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஐக்கிய இளைஞர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் மற்றும் ஈமெயில் முகவரியை வெளியிட்டு இருக்கிறது.