மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததால் கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய மாரியம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாரியம்மாள் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு பரோட்டா வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான தாகா என்பவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தாகாவுக்கு 3000 ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.