புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டோ ஸ்டானிஷ் வினித்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு படித்த ஆண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு ஜெயசீலன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கூறியதாவது, அந்த உயர் மின்னழுத்த கம்பி 25 ஆண்டுகள் பழமையானது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்படி இருக்கும்போது ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் அதனை வேறு வழித்தடத்தில் கொண்டு செல்லவும், உயர்த்தி கொண்டு செல்லவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 3 மாத காலத்திற்குள் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.