தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திரபிரதேச மாநிலம், பிஜாவர் என்ற பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நேற்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அங்கு வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக மின்சார லைட் பயன்படுத்தியுள்ளார். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் லட்சுமணன் அலறினார். இதை பார்த்த குடும்ப நபர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது ஒருவர் பின் ஒருவராக மின்சாரம் தாக்கப்பட்டு 5 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.