Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்டிட்டு இருந்தோம்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்…. மின்சாரம் தாக்கியதில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டிட பனியின் போது மினசாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானப் பணிக்காக காக்காபாளையத்தை சேர்ந்த தொழிலாளி அப்பு மற்றும் வேலு இருவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்பு சாரம் அமைப்பதற்காக கம்பியை தூக்கிய போது கம்பி மேலே சென்ற மின்உயர் மீது உரசி மின்சாரம் தாக்கி அப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். காப்பாற்ற முயன்ற வேலு படுகாயமடைந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன சுந்தரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அப்புவை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |