கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேனி கோட்டை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் உணவை தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றது. அந்த வகையில் நேற்று உணவு தேடி வந்த குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள கோயில் அருகே மின்சார ஒயரில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக விளையாடிக் கொண்டிருந்த குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் குரங்கு படுகாயம் அடைந்துள்ளது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்து முடியவில்லை.
இதனால் வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வராததால் வேதனையால் துடித்துக் கொண்டிருந்த குரங்கை பொதுமக்களை மீட்க முயற்சி செய்து நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். குரங்கிற்கு சிகிச்சை அளிக்க தகவல் அளித்தும் வராத அதிகாரிகளின் செயலால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மீண்டும் குரங்கு வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்து இளைஞர்கள் உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். அதனால் உடனே வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று அந்த குழந்தை பிடித்து வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.