Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்…. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மாணவரின் தாய் தந்தை தலைமையிலான உறவினர்கள், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் பாளை மகாராஜா நகரில் இருக்கும் தலைமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, எங்கள் வீட்டிற்கு மேல் புறம் அதிக திறன் கொண்ட மின்வயர் பாதுகாப்பின்றி செல்வதால் தான் எங்களது மகன் உயிரிழந்தான்.

எனவே அஜாக்கிரதையாக இருந்த மின்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீனிவாசன் அங்கு விரைந்து சென்று அனுமதியின்றி இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |