Categories
மாநில செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும்…. ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவும்,முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |