Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மின்சார ஓயர் உரசி தீப்பிடித்த லாரி”…. டிரைவர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!

கோவையில் மின்சார ஒயரில் லாரி உரசி தீப்பிடித்து இருந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியில் கரூரை  சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு லாரியை எடுத்துக்கொண்டு காரமடைக்கு சென்றுள்ளார். அப்போது லாரியில் தார் கலவை ஏற்றுக்கொண்டு நாலு மணி அளவில் குமாரபுரம் பகுதியில் சாலை பணி நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.

அங்கு ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை தொடர்ந்து ஆறுமுகம் லாரியின் பின்னால் இருந்த கலவையை சாலையில் கொட்டுவதற்காக தானியங்கி கருவியை இயக்கியுள்ளார். உடனடியாக தார்கலவையை கொட்டும் வகையில் லாரியின் பின்பகுதி டிப்பர் மேல்நோக்கி உயர்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி டிப்பர் அங்கிருந்த மின்சார ஒயரில் உரசி உள்ளது. இதனால் திடீரென மின்சாரம் தாக்கிய வேகத்தில் லாரியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பறவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்து டிரைவர் ஆறுமுகம் கீழே இறங்குவதற்காக இரும்பு கம்பியை பிடித்து இழுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது மேலும் தீ பற்றி எரிந்ததில் அவர் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டுள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் ஆறுமுகம் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவலின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் லாரி முழுவதும் இருந்து சேதமாகியுள்ளது. இதனை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |