Categories
தேசிய செய்திகள்

மின்சார கட்டணத்தில் 50% தள்ளுபடி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார கட்டணத்தில் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் உறுதி செய்துள்ளார்.

அம்மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ள இலவச பயன்பாட்டுக்கான கணக்கீடு ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |