Categories
மாநில செய்திகள்

மின்சார கட்டணத்தை செலுத்த அவகாசம்…. ஜி.கே வாசன் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் தொற்று குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக சிக்கலில் தவித்து வருகின்றனர். எனவே மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ளதால் மக்கள் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வேளையில் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அதற்கு அபராதம் விதிப்பதை கண்டித்த அவர், மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்த அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |