மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற வாலிபர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். கல்லூரியில் எம்எஸ்சி பயின்று வரும் தனுஷ்குமார் தன் தங்கைக்கு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் ஓடும் போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் செல்லும் எனவும் 20 கிலோ மீட்டர் சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் எனவும் தனுஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் ஃபிட்னஸ் சான்றிதழ் கட்டாயம் என்பதால் இதனை சாலைகளில் ஓட்டிச்செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.