Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்களில் பயணிக்க…. 2 டோஸ் கட்டாயம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆண்கள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தது. இந்நிலையில் ஆண் பயணிகளும் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம் ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.  2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித நேர கட்டுப்பாடின்றி மின்சார ரயில்களில்பயணிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |