Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!!!

அரக்கோணம் தடத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரக்கோணம் தடத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருத்தணி சென்ட்ரல் காலை 8.45, 11,40 மணி ரயில்கள், அரக்கோணம் -சென்ட்ரல் 9:30, 10.10, 10.30, 11 மணி ரயில்கள், திருவள்ளூர்- சென்ட்ரல் காலை 10, 10.30, 11.15, 11.25, 11.50, மதியம் 12, 12.55, 1.15 மணி ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்து கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

Categories

Tech |