Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் ஆகிய தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7 மற்றும் 8 ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 7 மற்றும் 8 ஆம் தேதி திருவள்ளூர்-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம்-சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி மற்றும் மதியம் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே காலை 10.15 மணி மற்றும் மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் 8 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களுக்கு பதிலாக கடம்பத்தூர்-சென்டிரல் இடையே காலை 10.25 மணி, 11.35 மணி, மதியம் 1.25 மணிக்கும், திருவள்ளூர்-சென்டிரல் இடையே காலை 11.10 மணி, மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |