சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 மணி, 11.45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நாளை முழுவதும் ரத்து.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-கடற்கரை இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ஆவடி-கடற்கரை இடையே பகுதியாக ரத்து, அரக்கோணம்-சென்டிரல் இடையே இரவு 9.50 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்டிரல் இடையே இரவு 10.45 மணி, திருத்தணி-சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ஆவடி-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து, அரக்கோணம்-வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நாளை அரக்கோணம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.