Categories
மாநில செய்திகள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க கோரி தேர்வாகியுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுபற்றி வெளியிட்டுள்ள அரசாணையில் மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |