உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மின்தடை காரணமாக பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து உக்ரேனியர்களின் மனங்களை மகிழ்விக்கும் விதமாகவும் அதே நேரம் மின்தடையை சமாளிக்கும் விதமாகவும் உக்ரேனிய உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரம்யமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.