தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக இருந்த புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார்.
அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் மின்தடை குறித்த புகார் அளிக்க வந்த பொதுமக்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, மின் மீட்டரை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மின்மீட்டரை தூக்கியடித்த மின்வாரிய ஊழியர் குப்புராஜ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனித்தா தெரிவித்துள்ளார்.