Categories
மாநில செய்திகள்

“மின்தடை…. பழுது பிரச்சனையா?”…. புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்…. நோட் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் மன்றம் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு பரப்பும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு வசதிகள் உள்ளன.

* தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு : சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

* சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன : நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.

1. சென்னை – 9445850829

2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் – 9444371912

3. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி – 9442111912

4. சேலம், ஈரோடு, நாமக்கல் – 9445851912

5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912

6. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் – 8903331912

7. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் – 9486111912

8. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி – 6380281341

9. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் – 9445855768

புகார்கள் / குறைகளை மின்னகம் – மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். மேலும், புகார்களை www.tangedco.gov.in  Reach us  Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.

Categories

Tech |