Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின்துறை அமைச்சர் ஊரிலேயே… மின் கம்பி அறுந்து விழுந்து… கையை இழந்த மாணவியின் பரிதாப நிலை..!!

மின்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவியின் கை துண்டிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தபோது உயர் அழுத்த கம்பி அறுந்து ஹேமா மீது விழுந்துள்ளது.

இதில் தூக்கி அடிக்கப்பட்ட மாணவியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஆவாரங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சரியான சிகிச்சை வசதி கிடைக்காததால், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 7 லட்சத்துக்கு மேல் செலவு செய்தும் மாணவியின் கையை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் கை அழுகத் தொடங்கிய காரணத்தால் மாணவியின் இடது கை அகற்றப்பட்டது. இரண்டு வாரத்துக்கு முன் இந்த சம்பவம் நடந்த நிலையிலும் ஊடகங்கள் இது பதிவாகவில்லை. சமீபத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து 25 ஆயிரம் உதவி தொகையை அளித்த, பிறகு விஷயம் வெளியே தெரிய வந்தது. மேலும் மின்கம்பி எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்தும் மின்வாரியம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் மாவட்ட ஆட்சியர் போனில் அழைத்து ஆறுதல் கூறினார். மாணவிக்கு முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளார். மாணவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போதுதான் அவரது எதிர்காலம் குறித்த கவலை இன்றி இருக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |