தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழிற்கொள்கை முறையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள தொழில் கொள்கைகள் பின்வருமாறு.
- வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மின்னணு துறைக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டது.
- முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கக் கூடிய வகையில் தொழிற் கொள்கை.
- கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களில் முதலீட்டை ஈர்ப்பதற்கு புதிய தொழில் கொள்கை.
- மேலும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 41 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தின் மூலமாக ரூ.30,664 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.
- அதனால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது என்று தொழில் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.