Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி இறந்த பசுமாடு…. சிறுமிகளின் உடல்நிலை பாதிப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்ததோடு, சிறுமிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அடைக்கலசாமி(45) என்பவருக்கு சொந்தமான பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அடைக்கலசாமியின் மகள்களான 2 சிறுமிகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் 2 வீடுகளில் மின் இணைப்பு வயர்கள் தீப்பிடித்து எரிந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

Categories

Tech |