சென்ற ஆண்டு மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் இரண்டு பேரும் இணைந்து நடித்த “மின்னல் முரளி” படம் வெளியானது. இளம் டைரக்டர் பசில் ஜோசப் இப்படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பைப் பெற்றது.
மேலும் தென்னிந்திய அளவிலும் பாலிவுட்டிலும் உள்ள முக்கியமான திரையுலக ஜாம்பவான்கள் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் சிங்கப்பூரில் ஆசியன் அகாடமி(2022) விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் “மின்னல் முரளி” படத்திற்காக சிறந்த டைரக்டர் விருதை பசில் ஜோசப் பெற்றிருக்கிறார். தற்போது அவருக்கு திரைபிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.