Categories
மாநில செய்திகள்

மின்னல் ரவுடி வேட்டை… அதிரடி ரெய்டு.. மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை…!!!!!

 

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொது அமைதியை பேணி காப்பதற்கும் நன்னடத்தை பெற வேண்டி 56 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தோம் கொலை கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும் தலைமறைவாக இருந்து வந்தபடி பிடியாணை குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து மொத்தம் 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இதுபோன்ற தொடர்ந்து அதிரடி வேட்டை செய்து குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Categories

Tech |