Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற பேருந்துகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகள் அதிக சத்தத்துடன் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளை யார் முதலில் ஏற்றுவது என்ற போட்டியில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வருகிறது. இந்நிலையில் மதுரை போக்குவரத்து துறை துணை ஆணையர் செந்தில்நாதன் உத்தரவின்படி மேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் தேவகோட்டை, காரைக்குடி வழித்தடங்களில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ குழாய் ஒலிப்பான்கள் மற்றும் காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினர். மேலும் விதிமுறைகளை மீறியதாக 7 பேருந்துகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |