தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்க தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 35 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 17 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா முழுமையாக அழிய தடுப்பூசி ஒன்றே ஆயுதம்.தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.