Categories
மாநில செய்திகள்

“மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்” தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குகள் என்று 10-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.‌ 3 நாட்களில் சரியாகிடும் காய்ச்சலுக்காக எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க முடியும். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வரும் போது அரசு அதை முதலில் செய்யும். தற்போது விடுமுறை வழங்க  வேண்டிய அவசியம் இல்லை. எனவே யாரும் விடுமுறை வழங்குங்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்

Categories

Tech |