3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற 1.10 மணி நேரத்தில் 90 கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளைங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா .இவரது மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்காக (21)வயதான ஆகாஷ் என்ற டிரைவர் மின்னல் என்ற ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளைக்கோவிலில் இருந்து கோவைக்கு செல்ல வேண்டியிருந்தது .கோவை மருத்துவமனைக்கு செல்ல 90 கி.மீ. தூரம் ஆகும். 6 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 7:10 மணிக்கு கோவையை அடைந்தது.
உடனடியாக சந்தோசை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கொண்டுபோய் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சந்தோஷ் பொது பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டார். வெள்ளகோவிலில் இருந்து கோவைக்கு பஸ்சில் பயணம் செய்தால் கூட குறைந்தது இரண்டரை மணி நேரம் வரை ஆகும். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் 1மணி நேரம் 10 நிமிடத்தில் விரைந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவினார்.ஆம்புலன்சில் அனைத்து விளக்குகளை ஒளிரச் செய்து சைரன் ஒலியுடன் மின்னல் வேகத்தில் ஓட்டி வந்தேன் குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் எனது குறிக்கோளாக இருந்தது .சாலை போக்குவரத்து நெருக்கடியில் தான் இருந்தது சிரமப்பட்டு தான் கோவையை அடைந்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டதால் நெகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.குறுகிய நேரத்தில் மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாசுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.