Categories
தேசிய செய்திகள்

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்…. தூக்கி எறியப்பட்ட சிறுவன்…. நெஞ்சை பதபதைக்கும் சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் வேகமாக சென்ற ஆடி கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து கார் ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அந்த மாநில முதல்வர் அசோக் கெல்லாட் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் இது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து படுகாயமடைந்த அவர்களின் உயிரை காப்பாற்ற முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அவர்களை அரசு முழுமையாக கவனித்துக் கொள்ளும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |