Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வயரை திருட சென்ற நபர்… திடீரென நடந்த சம்பவம்… நெல்லையில் சோகம்..!!

மோட்டார் வயரை திருட சென்ற கட்டிடத்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  அம்பாசமுத்திரத்தை  சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி  முத்துக்குமார். இவர்  சென்னை திருமங்கலத்தில் உள்ள வாடகை வீட்டில் தன் மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது மின்சாரம் அவரை தாக்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துக்குமார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மோட்டார் வயரை திருட சென்ற போது மின்சாரம் அவரை தாக்கி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

Categories

Tech |