கொரோனா தொற்று காரணமாக மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதைதொடர்ந்து மின்வாரியத்தில் 2,900 களஉதவியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மின்வாரியம் சார்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.