தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே, முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களை முதல்வர் செய்து வருகிறார். நேற்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் ஊக்கத்தொகை அறிவித்தார். தொடர்ந்து தனது முதல்வர் பதவியை வெற்றிகரமாக அவர் செய்து வருகின்றார். அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு ஆலோசனைகளையும் செய்து முக்கிய முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மின்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மின் வாரிய தொழிலாளர்கள் உயிரிழந்ததை அதில் சுட்டிக் காட்டியுள்ளதுடன், உடனடியாக இதுபற்றி அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.