Categories
தேசிய செய்திகள்

மின்விசிறியில் தொங்கிய மனைவி…. அவ முகம் சந்தோசமா தான் இருந்துச்சி…. கதறிய கணவர்…!!

பெண் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்பள்ளியில் வசிக்கும் தம்பதிகள் நீபல் – ரீட்டா. நீபல் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நீபல் தன்னுடைய இரண்டு மகன்களுடன் புதிதாக கட்டி இருக்கும் வீட்டை பார்க்க சென்றுள்ளார். இதனால் ரீட்டா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து புதிய வீட்டைப் பார்த்து விட்டு மூவரும் வீடு திரும்பிய போது ரீட்டா மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த அவருடைய நீபல் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினர் ரீட்டாவின் கணவர் மற்றும் அவருடைய மகன்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், நாங்கள் மூவரும் வீட்டை விட்டு கிளம்பும் போது என் மனைவியின் முகம் மகிழ்ச்சியான தான் இருந்தது என்பதை அவர் முகமே காட்டிக் கொடுத்தது. ஆனால் அவருக்கு உடல் ரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்தார் என்று நீபல் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் கணவன் மற்றும் மகன்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியுடன் இருந்த போது உடல்நிலை பிரச்சினை சார்பாக அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. இதனால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும்  இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |