Categories
தேசிய செய்திகள்

மின்விசிறி கீழ் அமர்ந்திருப்பது போல…. புதியவகை பிபிஇ கிட் கண்டுபிடிப்பு…. குவியும் பாராட்டுக்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் ஒருபுறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. இவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழுகவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்த கவச உடைகள் காற்றோட்ட வசதி இல்லாததால் அவர்களுக்கு அசவுகரியமாக தான் இருக்கிறது என்றாலும் அதை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவ-டெக் காற்றோட்ட கூட்டமைப்பு எனும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் குளிர்ச்சியான தனிநபர் கவச உடைகளை மும்பையைச் சேர்ந்த 19 வயது மாணவன் நிஷால் சிங் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கிட் அணியும் போது மின்விசிறியின் கீழ் அமர்ந்திருப்பது போல் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |