Categories
அரசியல்

மின்வெட்டு குறித்த கேள்வி…. “அணிலை தான் கேட்கணும்”… கிண்டல் செய்த சி.வி சண்முகம்…!!!!!!!

அதிமுக உட்கட்சி தேர்தலில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  அதனைத் தொடர்ந்து நேற்று (22.04.2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம்கடந்த 1.5 வருடமாக செயல்பட்டிருந்தால் நமக்கு விவரங்கள் கிடைத்திருக்கும்.

மேலும் 69% இட ஒதுக்கீடுக்கான இறுதி விசாரணை வரும் போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ‘69% இட ஒதுக்கீடு செல்லும்’ என உறுதியாக வாதாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.ஆனால், சமூக நீதியை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் இந்த திமுக அரசு… வாயால் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் யாருக்கும் சமூக நீதி கிடைக்காது. குலசேகரன் ஆணயத்தை திமுக முடக்கியதற்கான காரணம் என்ன? நோக்கம் என்ன? ஒரு பக்கம், “இட ஒதுக்கீட்டை மீட்போம்” என்கிறீர்கள்… மறுபக்கம், ஆணையத்தை முடக்குகிறார்கள். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்’ என்று திமுக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது என்றார்.

இந்நிலையில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அணிலை தான் கேட்கணும் என கிண்டலாக தெரிவித்த சிவி சண்முகம். இது செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற மின்வெட்டு தான் என்றார். 2006 – 2011 வரை திமுக செய்த ஊழலை  தற்போது மீண்டும் செய்ய பார்க்கிறார்கள் என்ற அவர், தரமற்ற நிலக்கரிகளை வாங்கி கொள்ளை அடிப்பதாக இப்படி செய்கிறது திமுக என குற்றம் சாட்டினார். இதை கையாலாகாத திறமையற்ற அரசு என்றுதான் கூற வேண்டும் என விமர்சனம் செய்தார்.

மேலும், நீங்கள் கட்சியில் மாநில பொறுப்பு கேட்பதாக கூறப்படுகிறதே… என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், “இருக்கிற பொறுப்புக்கே வேலையில்லை” என்று புன்னகைத்தபடி கடந்தார்.

Categories

Tech |