Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தகவல்களை சேகரிப்பதற்காக நேரில் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு செல்வதாக அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஆய்வுக்கு பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Categories

Tech |